Map Graph

தங்கசேரி கலங்கரை விளக்கம்

தங்கசேரி கலங்கரை விளக்கம் (Tangasseri Lighthouse) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பெருநகரப் பகுதியில் தங்கசேரியில் அமைந்துள்ள இரண்டு கலங்கரை விளக்கங்களுள் ஒன்றாகும். கொல்லம் மாநகராட்சி மற்றும் கொல்லம் கலங்கரை விளக்கப் பொது இயக்ககம் தங்கசேரி கலங்கரை விளக்கத்தைப் பராமரிக்கிறது. 41 மீட்டர் உயரத்துடன் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் சாய்ந்த பட்டைகள் வரையப்பட்ட உருளையான இக் கோபுரம் 1902 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கேரள கடற்கரையில் அமைந்துள்ள இரண்டாவது மிக உயர்ந்த கலங்கரை விளக்கமாகவும் கேரளாவில் அதிகமாகப் பார்வையிடப்பட்ட கலங்கரை விளக்கமாகவும் இது கருதப்படுகிறது.

Read article
படிமம்:Thangassseri_Lighthouse.jpgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:Thangassery_light_house_-_spiral_inside_-_large.jpgபடிமம்:Leuchtturm_in_Kollam.jpgபடிமம்:Tangasseri_Lighthouse,_Oct_2016.jpgபடிமம்:A_distant_view_of_Tangasseri_Lighthouse,_Oct_2016.jpgபடிமம்:Information_board_in_Thangassery_Lighthouse.jpgபடிமம்:Tangasseri_Lighthouse,_Mar_2016.jpg